×

மாமல்லபுரம் கடற்கரையில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது: மீனவர்கள் அச்சம்

 

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு கடல்வாழ் உயிரினங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். அதேபோல், மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 5 கிமீ தொலைவுக்கு ஆங்காங்கே சுமார் 15 கிலோ வரை எடையிலான 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தன. இதை பார்த்ததும் அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மீனவர்களும் இறந்து கிடந்த ஏராளமான கடல் ஆமைகளை பார்த்ததும், ‘இது சுனாமிக்கான எச்சரிக்கையாக இருக்குமோ?’ என்று அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 4 மாதங்களில் கடலில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அந்நேரத்தில் கடலில் கலக்கும் நச்சு கழிவுகள், கடலில் அடித்து வரப்படும் குப்பை கழிவுகள், லாஞ்சர் மற்றும் பெரிய கப்பல்களிலிருந்து இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளை கடல் ஆமைகள் சாப்பிடும்போது உயிரிழப்பு ஏற்பட்டு கரை ஒதுங்குகின்றன. மேலும், தற்போது கடலில் சுழற்காற்று வீசுவதால், அவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று அச்சம் தெரிவித்தனர்.

Tags : Mamallapuram beach ,Mamallapuram ,
× RELATED நந்தனம் பழங்குடியினர் பள்ளி நில...