கரூர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கரூர், ஜன. 28: கரூர் மாவட்டத்தில் பிரபலமான கோயில் கரூர் மாரியம்மன் கோயில். இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 24ம்தேதி மங்களஇசை, விநாயகர் அனுக்ஞை, கணபதிஹோமம் போன்ற நிகழ்வுகளுடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, 25ம்தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம் போன்ற நிகழ்வுகளும், 26ம்தேதி திருமுறை இசை, விசேஷ சாந்தி, ஆத்மசுத்தி, விநாயகர் வழிபாடு போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நேற்று காலை 9.30மணியளவிலும், 10.15மணிக்கு மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்வினை அடுத்து தீபாராதனை நிகழ்வு நடத்தப்பட்டு, கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.

Related Stories: