திரளான பக்தர்கள் பங்கேற்பு குளித்தலை அரசு ஆண்கள் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு குளித்தலை, ஜன.28:குளித்தலை அரசு ஆண்கள் மேல்

நிலைப் பள்ளியில் கடந்த 1994ம் ஆண்டு பிளஸ் 2 வணிகவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். வகுப்பாசிரியர்கள் தட்சிணாமூர்த்தி கோவிந்தராஜ் மற்றும் தமிழாசிரியர்கள் கடவூர் மணிமாறன் ஞான வேலாயுதம் ஆகியோர் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து காவேரி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் மாணவர்களுடன் ஆசிரியர்கள் பள்ளி அனுபவத்தையும் மாணவர்களின் எதிர்காலம் குழந்தைகள் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல் செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்கு பின்பு ஆசிரியருடன் சந்திப்பு நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிப்பதாகவும் அடுத்த ஆண்டு முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனவும் இதில் முடிவு செய்தனர் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>