18வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அட்டை பெறுவதற்கு 31ம் தேதி வரை சிறப்பு முகாம்

கரூர், ஜன. 28: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படும் மறுவாழ்வு இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திட வசதியாக கலெக்டர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் 18வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் பதிவு செய்து வாக்காளர் அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜனவரி 31ம்தேதி வரை தாசில்தார் அலுவலகங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

முகாமில் கலந்து கொள்ள இயலாத கடுமையாக பாதிப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தங்களின் விபரங்களை வாட்ஸ்அப் எண்ணில் 8344341474 தெரிவித்திடலாம்.பிற மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்(1) ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியை சார்ந்த வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலகத்தில் நேரில் வந்து தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>