கலெக்டர் தகவல் குளித்தலை அருகே 2 கார்கள் மோதி கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம்

குளித்தலை, ஜன.28: கரூர் மாவட்டம் ராயனூரைச் சேர்ந்தவர் அசோக்குமார்/ இவர் தனது மனைவி அர்ச்சனா, 2 குழந்தைகள் மற்றும் இவரது மாமியார் சாரதா ஆகியோருடன் நேற்று மாலை தனது காரில் ஓட்டுநர் குமரவேலுடன் சென்றனர்.

அதேபோல் காரைக்குடியில் திருமண நிகழ்ச்சிக்கு செண்டை மேளம் வாசிக்க சென்று விட்டு திரும்பி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் காரில் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை தண்ணீர்பள்ளி அருகே இந்த 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு காரின் முன் பகுதி சேதமானது. மற்றொரு கார் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் சென்ற சாரதா, கார் டிரைவர் குமரவேல், மற்றொரு காரில் சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரும் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>