×

உற்பத்தி பொருட்கள் எடுத்து செல்ல உள்ளூர் லாரிகளுக்கு முன்னுரிமை

மேட்டூர், ஜன.28: மேட்டூர் அருகே பொட்டனேரியில் ஜேஎஸ்டபிள்யூ இரும்பு உருக்கு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லவும், ஆலைக்கு தேவையான மூலப்பொருட்களை கொண்டு வரவும் நூற்றுக்கணக்கான லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களை சேர்ந்த லாரிகளும் வந்து செல்வதால், உள்ளூர் லாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்த கோரிக்கையை பரிசீலித்த ஆலை நிர்வாகம், உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்தது. இதனையடுத்து உள்ளூர் லாரி உரிமையாளர்களுக்கான சேவை மையத்தை, ஜேஎஸ் டபிள்யூ நிறுவனத்தின் முதன்மை அலுவலர் பிரகாஷ் ராவ், உதவி துணைத்தலைவர் பிரிகேடியர் சஞ்சய் தாகூர் ஆகியோர் திறந்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை ரமேஷ், அழகேசன் ஆகியோர் செய்திருந்தனர். இத்தகவலை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் விமல் தெரிவித்தார்.  ...

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்