×

காவேரி மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

சேலம், ஜன.28: சேலம் காவேரி மருத்துவமனையில், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் முழுவதும் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்த மருத்துவமனை நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 23ம் தேதி காலை 11.30 மணிக்கு ‘மார்பக புற்றுநோய் ஆரம்ப கண்டறிதலும், அதிநவீன சிகிச்சை முறைகளும்’ என்ற தலைப்பில் முகநூல் கலந்துரையாடலை நேரடி ஒளிபரப்பு செய்தனர். இந்த கலந்துரையாடலில், சேலம் காவேரி மருத்துவமனையின் கேன்சர் சர்ஜன் டாக்டர் உமாசங்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் கண்டறிதல், சிகிச்சை முறைகள், காரணிகள், வயது வரம்பு போன்ற பல கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். இந்த நேரடி ஒளிபரப்பை காண இயலாதவர்கள் இதன் பதிவை https://www.facebook.com/KauveryHospitalSalem/videos என்ற முகநூல் பக்கத்தில் கண்டு பயன்பெறலாம்.

Tags : Kaveri Hospital ,
× RELATED காவேரி மருத்துவமனையில் அறுவை...