×

மாற்றுத்திறனாளி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன. 28: ஆத்தூர் அருகே மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டதை கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆத்தூர் மங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கோபி (38). மாற்றுத்திறனாளியான இவர், அதே பகுதியில் பெட்டிகடை வைத்துள்ளார். கோபி குடியிருந்து வரும் வாடகை வீட்டின் மற்றொரு புறத்தில், மற்றொரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இரு குடும்பங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே கோபியின் தூண்டுதலின் பேரிலேயே, வீட்டை காலி செய்ய நேரிட்டதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த சிலர், கடந்த சில தினங்களுக்கு முன், கோபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கோபி, ஆத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்து ஊன்றுகோள் அறக்கட்டளை அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் பாதிக்கப்பட்ட கோபி, அவரது மனைவி திலகவதி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,attack ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...