×

தூய்மை பணியாளர் குடியிருப்பில் புதிய குடிநீர் இணைப்பு எடுக்க மக்கள் எதிர்ப்பு

ஓமலூர், ஜன.28:  ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகில், சுமார் 50 தூய்மை பணியாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதிகாலையில் பணிக்கு செல்லும் இவர்கள், பணி முடிந்து மதியம் வீடு திரும்புகின்றனர். இதனால், இவர்களுக்கு மட்டும் மதிய நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, இவர்களுக்கு அரைமணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இங்குள்ள குடிநீர் இணைப்பில் இருந்து பக்கத்து தெருவுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

இதற்காக செயல் அலுவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று அங்கு சென்ற போது, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காமராஜ் நகர் பகுதியில் ஏற்கனவே குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளது. அங்குள்ள இணைப்பில் இருந்தே இணைப்பு வழங்க முடியும். எங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றனர். மீண்டும் எங்களுக்கான இணைப்பில் இருந்து, குடிநீர் இணைப்பு வழங்கினால் எங்களுக்கு குடிநீரே கிடைக்காது என்றனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் வசந்த், பணியாளர்கள் கொடுத்த மனுவிற்கு செயல் அலுவலர் விளக்க கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். விளக்க கடிதம் கொடுத்த பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா