×

குழந்தைகள் பாதுகாப்பு குழுவுக்கு வழிகாட்டி கையேடு

கிருஷ்ணகிரி, ஜன.28: கிருஷ்ணகிரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கு வழிகாட்டி கையேட்டை கலெக்டர் வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கான வழிகாட்டி கையேட்டை, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை வகித்து வெளியிட்டார். இந்த கையேட்டில், பெண் குழந்தைகள் பாதுகாப்பின் முக்கியத்துவம், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கான காரணங்கள், அவர்களுக்கு எதிரான துன்புறுத்தலால் ஏற்படும் பாதிப்புகள், பாலியல் துன்புறுத்தல், குழந்தை கடத்தல், சுரண்டல், குழந்தை தொழிலாளர்களின் பாதிப்புகள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் சிசுக்கொலை மற்றும் நெருக்கடி கால நிலைகள் (இயற்கை பேரழிவு) உள்ளிட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி உதவி இயக்குநர்கள் ராஜசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மல்லிகை பூவில் பூச்சி மேலாண்மை விளக்கம்