×

உம்மியம்பட்டி அரசு பள்ளிக்கு நவீன தொழில்நுட்ப சாதனம்

தர்மபுரி, ஜன.28: நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் நரசிம்மன் மற்றும் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனத்தினரை அணுகி, பங்களிப்பு வாயிலாக பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி ஐவிடிபி தன்னார்வ தொண்டு நிறுவனர் ராமன் மக்சேசே விருது பெற்ற குழந்தை பிரான்சிஸ், ₹5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு தேவையான சிசிடிவி கேமரா, 55 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி, தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினி வகுப்பறைக்கு 12 கம்ப்யூட்டர்கள் வழங்கினார்.   ...

Tags : Ummiyampatti Government School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா