200 பஸ்கள் சென்னை சென்றதால் தர்மபுரியில் பயணிகள் தவிப்பு

தர்மபுரி, ஜன.28: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு, அதிமுகவினர் 200 தனியார் பஸ்களில் சென்றதால், தர்மபுரி பஸ் நிலையத்தில் போதிய பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவினர், சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதையொட்டி, நேற்று தர்மபுரி பஸ் நிலையத்தில் அரசு பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் அரூர், மேட்டூர், பென்னாகரம் போன்ற பகுதிகளுக்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதன் காரணமாக நேற்று காலை முதல், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் அலை மோதினர். பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும்பாலான பயணிகள் தவித்தனர். இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: