41 பேர் பலி வழக்கு போலீசாரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான விசாரணைக்காக நேற்று காலை 10 மணியளவில் 3 பெண் எஸ்ஐ உள்பட 4 எஸ்ஐக்கள், 5 ஏட்டுகள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் தனித்தனியாக ஆஜரானார்கள். அவர்களிடம், காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை எந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தீர்கள், கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி, எத்தனை பேர் மயங்கி விழுந்தனர் என பல்வேறு கேள்விகளை கேட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சரவணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Related Stories: