×

மது விற்றவர் கைது

திருப்பூர், ஜன.28:திருப்பூர் மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியரசு தின விடுமுறை நாளான நேற்று முன்தினம் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, மங்கலம் போலீசார் அய்யன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராசு (55) என்பவரை நோட்டமிட்டனர். அவர், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Liquor seller ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது