பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருப்பூர், ஜன.28:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம், தாராபுரம் வட்டம் வீராட்சிமங்கலம் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் நேற்று மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:எங்கள் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. கொரோனா நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கேட்டால் உங்களது ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறுகின்றனர். மேலும், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் என அலைக்கழிக்கின்றனர். எனவே, எங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூ.2,500மும் வழங்க வேண்டும். மேலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories: