×

ஓய்வூதியம் கேட்டு தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

திருப்பூர், ஜன.28: ஓய்வூதியம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை போலீசார்  கைது செய்தனர். உடுமலை புங்கமுத்து பகுதியை சேர்ந்த பெரியகாளிமுத்து, மடத்துக்குளம் கடத்தூர் ஊராட்சியை சேர்ந்த கண்ணையன் ஆகியோர் தூய்மைபணியாளர்கள். இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றனர். ஆனால், இவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் ரொக்க பணம் வழங்கக்கோரி, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கண்ணன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் பாலன் உள்பட பலர்  கலந்து கொண்டனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 22 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்கள் உணவு சாப்பிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் சமாதானம்  ஆகினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Cleaning workers ,
× RELATED சுவற்றில் இயற்கை காட்சிகள் 525 தொழிலாளர்கள் பணி நீக்கம் கூடாது