பறவை காய்ச்சல் பாதிப்பை தவிர்க்க கோழி விற்பனையாளர்களுக்கு அறிவுரை

ஊட்டி,ஜன.28: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது, இறைச்சி கோழி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் பராமரிக்கப்படும் கோழி கூண்டுகளை மிகவும் சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். வாரம் ஒருமுறை கிருமி நாசினி கொண்டு கடை, கோழி கூண்டுகள் மற்றும் சுற்றுபுறத்தை சுத்தம் செய்ய வேண்டும். தங்கள் கடைகளின் முன் அசுத்த நீர் தேங்காவண்ணம் பார்த்தக் கொள்ள வேண்டும். அவ்வப்போது தங்கள் கடைகளின் முன் உள்ள கால்வாய்களை நகராட்சி ஊழியர்களை கொண்டு சுத்தம் செய்து கொசுக்கள், ஈக்கள் போன்றவை இல்லாவண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக விலங்குகள் நல பாதுகாப்பு சட்டத்தின் படி கோழிகள் அடைத்து

வைக்கும் கூண்டுகள் பின்வரும் அளவுகளில் பராமரிக்கப்பட வேண்டும்.

4 வாரம் வயதுடைய கறிக்கோழிகளை ஒரு கோழிக்கு 30 செ.மீ.,நீளம் மற்றும் 30 செ.மீ அகலம், 18 செ.மீ., உயரம் அளவுள்ள கூண்டுகளில் அடைக்க வேண்டும். 7 முதல் 8 வார கறிக்கோழிகளை ஒரு கோழிக்கு 45 செ.மீ.,நீளம், 40 செ.மீ.,அகலம், 35 செ.மீ., உயரம் அளவுள்ள கூண்டுகளில் மட்டுமே அடைக்க வேண்டும். கோழிகளுக்கு மூச்சு விடவும், தனியாக இடம்பெயரவும் அவைகளுக்கு போதிய இடவசதி கொடுப்பது அவசியமானதாகும்.

கோழிக்கூண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்க கூடாது.

எனவே, இந்த அளவுகளில் போதிய இட வசதியுடன் இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நடை முறைகளை தவறாமல் பின்பற்றி பராமரிக்க அறிவுரை வழங்கப்படுகிறது. நீலகிரியில் உள்ள அனைத்து இறைச்சி கடை கோழி உரிமையாளர்களும் உடனடியாக இதனை அமல்படுத்த கோரப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வரும்போது குறைபாடுகள் கண்டு பிடிக்கப்பட்டால் கோழிகள் விலங்கின நல பாதுகாப்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories: