பொங்கல் பண்டிகைக்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு வேட்டி,சேலை கிடைக்காததால் அதிருப்தி

பந்தலூர், ஜன. 28 :  நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக பலரும் வேலை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு நீலகிரி மாவட்டம் முழுதும் உள்ள நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினர்களாக இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அந்தந்த பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் தொகுப்பில் அரசின் இலவச வேட்டி,சேலை வழங்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே சம்மந்தப்பட்ட துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கலுக்கு வழங்கவேண்டிய அரசின் இலவச வேட்டி சேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: