×

தேர்தல் புறக்கணிப்பு மிரட்டல்

கோவை, ஜன.28: கோவையில் குடிசை மாற்று வாரியம் மூலம் நகருக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகருக்குள் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், குளக்கரையில்  உள்ள வீடுகள் மற்றும் பழுதடைந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டு இதற்கு மாற்றாக மலுமிச்சம்பட்டி, கோவைப்புதூர் மற்றும் கீரணத்தம் பகுதிகளில், மாற்று வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காந்திபுரம், சித்தாபுதூர் பகுதியில் வசித்து வந்த மக்கள் 50 பேர் தாங்கள் விடுபட்டுபோனதாகவும், தங்களுக்கும்  வீடுகள் ஒதுக்கி தர வேண்டியும் செல்வபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்கப்படாவிட்டால் 240 குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு