ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

ஈரோடு, ஜன.28: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து, தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக, கலெக்டர் கதிரவன் செயல்படுகிறார். இதுதவிர, ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருவர் என தலா 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தார் மற்றும் மாநகராட்சி நிர்வாக அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், ஈரோடு மேற்கு தொகுதிக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., தேர்தல் நடத்தும் அலுவலராகவும், ஈரோடு தாசில்தார் மற்றும் ஈரோடு யூனியன் ஆணையர் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மொடக்குறிச்சி தொகுதிக்கு ஈரோடு உதவி ஆணையர் (கலால்) தேர்தல் நடத்தும் அலுவலராகவும், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி தாசில்தார்கள் உதவி அலுவலர்களாகவும், பெருந்துறை தொகுதிக்கு ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பெருந்துறை தாசில்தார் மற்றும் யூனியன் ஆணையர் ஆகியோர் உதவி அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பவானி தொகுதிக்கு ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், பவானி தாசில்தார் மற்றும் யூனியன் ஆணையர் உதவி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தியூர் தொகுதிக்கு ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி தேர்தல் நடத்தும் அலுவலராகவும், அந்தியூர் தாசில்தார் மற்றும் யூனியன் ஆணையர் உதவி அலுவலராகவும், கோபி தொகுதிக்கு கோபி ஆர்.டி.ஓ., தேர்தல் நடத்தும் அலுவலராகவும், கோபி தாசில்தார் மற்றும் யூனியன் ஆணையர் உதவி அலுவலராகவும், பவானிசாகர் (தனி) தொகுதிக்கு ஈரோடு மாவட்ட உதவி இயக்குனர் (பஞ்சாயத்துக்கள்) தேர்தல் நடத்தும் அலுவலராகவும், சத்தியமங்கலம் தாசில்தார் மற்றும் பவானிசாகர் யூனியன் ஆணையர் ஆகியோர் உதவி அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: