வடலூர் வள்ளலார் சபையில் 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இன்று ேஜாதி தரிசனம்

நெய்வேலி, ஜன. 28: வடலூர் வள்ளலார் சபையில், 150வது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் வடலூர் சபை வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 150வது தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து இன்று(28ம்தேதி) காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5:30 மணி என 6 காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

இந்த ஜோதி தரிசனம் ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் தீபஜோதி ஒளியை காண இயலும். கருப்பு திரை, நீலத்திரை, பச்சைதிரை, செம்மைத்திரை, பொன்மைத் திரை, வெண்மைதிரை, கலப்புதிரை ஆகிய 7 திரைகளை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு கொ ரோனா தொற்று காரணத்தால் பக்தர்கள் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, வரிசையில் அனுப்பப்படுவார்கள். மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாத அளவுக்கு ஜோதி தரிசனம் காண்பதற்காக வெளியில் திரைகள் மூலம் ஜோதி தரிசனம் காண்பிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  மேலும் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அன்னதானம் வழங்குபவர்கள் அவர்கள் விதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும், என மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: