புதுடெல்லி: டெல்லி மற்றும் காஜியாபாத்தில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் மொத்தம் 44,862 போலி என்சிஇஆர்டிஇ புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இத்துடன் 2 ஆப்செட் அச்சு இயந்திரங்கள், காகிதங்கள், அச்சிடும் மை, அச்சு பிளேட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு முழுவதும் இந்த போலி என்சிஆர்டிஇ புத்தகங்களை விநியோகம் செய்துள்ளனர்.
