×

ஏழைகளுக்காக நேர்மையாக உழைக்கும் தலைவர்கள் இந்தியாவில் தேவை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

விதிஷா: மத்தியப் பிரதேசம், விதிஷா மாவட்டத்தில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள 8 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று திறந்து வைத்தார். அதே போல் பல்வேறு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘நாட்டில் பண பற்றாக்குறை இல்லை, நிதி பற்றாக்குறையும் இல்லை. கிராமங்கள், ஏழைகள், விவசாயிகளுக்காக நேர்மையாக உழைக்கும் தலைவர்கள் தேவை. என்னிடம் அட்சய பாத்திரம் உள்ளது. எவ்வளவு பேர் வேண்டுமானலும் வரட்டும். ஒருவர் கூட பசியால் திரும்பி செல்லும் நிலை ஏற்படாது. அனைவருக்கும் உணவளிப்போம். அதை நான் உறுதி அளிக்க முடியும். பொருளாதார நெருக்கடி காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பிராந்தியத்தில் 10,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நான் 90% விவசாயிகளுக்காக உழைக்கிறேன்’’ என்றார்.

Tags : India ,Union Minister ,Nitin Gadkari ,Vidisha ,Union Road Transport ,Highways ,Minister ,Vidisha district ,Madhya Pradesh ,
× RELATED விமானங்கள் ரத்து இண்டிகோவுக்கு ரூ.22 கோடி அபராதம்