- ஓ.பி.சி.
- சட்டமன்ற உறுப்பினர்
- போபால்
- பூல் சிங் பரயா
- காங்கிரஸ் கட்சி
- பாண்டர்
- மத்தியப் பிரதேசம்
- இந்தியா
போபால்: மத்தியப்பிரதேசத்தின் பண்டேர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூல் சிங் பரையா. இவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் , ‘‘இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் வன்கொடுமைகள் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புக்களை சேர்ந்த பெண்களுக்கு எதிராக நடக்கின்றன. ஒரு அழகான பெண்ணைப் பார்த் ஒருவன் மனம் திசைதிருப்பப்படலாம். அப்போது பாலியல் வன்கொடுமை நடக்கலாம். பழங்குடியினர், தலித்துக்கள் மற்றும் ஓபிசிக்களிடையே அதி அழகான பெண்கள் இருக்கிறார்களா என்ன? இந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு காரணம் அவர்களது(இந்து) மத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் தான். சில குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்களுடன் உடலுறவு கொள்வது தீர்த்த பலன் அல்லது புனித யாத்திரையின் பலனை அளிக்கிறது என்று சமஸ்கிருத சுலோகம் கூறுகின்றது” என்று தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவின் கருத்துக்கு மத்தியப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் ஆஷிஷ் அகர்வால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
