தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்

வேலூர், ஜன.28: வேலூர் மாவட்டத்தில் 208-19ம் ஆண்டில் தேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் வாங்க குடியரசு தினவிழாவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் உரிய விளையாட்டு மைதானம் இன்றியும் 43 வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு குடியரசு தினவிழாவில் கலெக்டர் சண்முகசுந்தரம் ₹1.68 லட்சம் உதவித்தொகை வழங்கி பாராட்டினார். அப்போது எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்தீபன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories:

>