தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்

கே.வி.குப்பம், ஜன.28: கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில் தவில் வாசித்து கொண்டிருந்த வித்வான் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி(65), தவில் வித்வான். இவர் நேற்று முன்தினம் கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தவில் வாசிக்க சென்றார். இரவு 10 மணியளவில் மணமக்கள் அழைப்பின்போது தவில் வாசித்து கொண்டிருந்த வித்வான் பிச்சாண்டி திடீரென மயங்கி விழுந்தார். மண்டபத்தில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ேக.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து பிச்சாண்டி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமக்கள் அழைப்பின்போது தவில் வித்வான் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Related Stories:

>