கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்

வேலூர், ஜன.28: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி ஒதுக்கீடு செய்து உயர்கல்வி அரசு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக உயர்கல்வி அரசு முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 2020-2021ம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் முறையான உதவிப்பேராசிரியர் நியமனம் செய்யப்படும் வரை தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் அதற்கான செலவினமாக ஒரு கவுரவ விரைவுரையாளருக்கு மாதம் ஒன்றுக்கு ₹15 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ₹21 கோடியே 80 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி -1 தற்காலிகமாக பணியாற்றி வரும் 2423 கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த நவம்பர் முதல் வரும் மார்ச் மாதம் வரை ஆகிய 5 மாதங்களுக்கு ₹18 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி அந்த நிதியை வழங்கி அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: