மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்

ஓசூர், ஜன.26:மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு, குழந்தை உரிமை மீறல் புகார்களை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இந்த ஆணையத்துக்கு புதிய தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, ஓசூர் வக்கீல் ராமராஜ் ஆணையத்தின் உறுப்பினராக பதவியேற்றுள்ளார். 30 ஆண்டுகள் வக்கீலாக பணியாற்றி வரும் இவர், நீதி நிர்வாகத்தில் முனைவர் பட்டம், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், தொழிலாளர் மற்றும் நிர்வாக சட்டம், குழந்தைகள் உரிமைகள் ஆகிவற்றில் முதுநிலை பட்டங்கள் உட்பட 15 பட்டங்களை பெற்றவர். ஆய்வு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். சட்டம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணித்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்ற அவரை, சக வக்கீல்கள் பாராட்டினர்.

Related Stories: