தஞ்சை மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தஞ்சை, ஜன.27: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து 77 பயனாளிகளுக்கு ரூ.3.13 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெண்புறா மற்றும் மூவர்ண பலூனை வானில் பறக்கவிட்டு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் சேர்ந்த 77 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்து 558 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 314 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல்துறை அலுவலர்களுக்கு பதக்கங்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், தஞ்சை டி.ஐ.ஜி.ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய், டி.ஆர்.ஓ.அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, ஆர்.டி.ஓ.வேலுமணி மற்றும் அனைத்துத்துறை முதன்மை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி பழனி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் கணேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ஒரத்தநாடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் கொடியேற்றி கொண்டாடினர்.

கும்பகோணம்: கும்பகோணம் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாதவராமானுஜம் தலைமையில் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் விஜயகுமார் தேசிய கொடி ஏற்றினார். நீதித்துறை நடுவர்கள் தரணிதர், பாண்டி மகாராஜா மற்றும் வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக கோட்ட தலைமையகத்தில் மேலாண் இயக்குநர் பொன்முடி தேசிய கொடி ஏற்றி, சிறப்பிடம் பெற்ற ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

திருவையாறு: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நெடுஞ்செழியன் கொடி ஏற்றினார். துணை தாசில்தார் வெங்கட்ராமன், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் திருவையாறு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.அரசர் கல்லூரியில், கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், அரசு இசைக் கல்லூரியில் முதல்வர் உமாமகேஸ்வரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஹேமலதா தேசியகொடி ஏற்றி மரியாதை செய்தனர். பாபநாசம்: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மணியரசன், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகவேல், தலைமை அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டர் சுமதி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் குமரவேல், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளர் இளங்கோவன், பாபநாசம் கிளைச் சிறையில் கண்காணிப்பாளர் திவான், பாபநாசம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயா தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் அரசு அலுவலகங்களில் 72வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் சார் -ஆட்சியர் பாலச்சந்தர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தாசில்தார் தரணிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: