தஞ்சையில் தம்பி விலாஸ், சமுத்ரா ஹால் திறப்பு விழா

தஞ்சை, ஜன.27: தஞ்சையில் தம்பி விலாஸ் மற்றும் சமுத்ரா பார்ட்டி ஹால் திறப்பு விழா நடந்தது. தமாகா மாநில தலைவர் ஜிகே வாசன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தஞ்சை பகுதி மக்கள் சுகாதாரத்தை பெரிதும் விரும்புபவர்கள், அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வாய்ப்பாக இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது என்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர் மூப்பனார், சுரேஷ் மூப்பனார், சுதாகர் மூப்பனார், மாவட்ட தலைவர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கவுதமன், கவிதா கவுதமன் ஆகியோர் வரவேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பிஎல்ஏ சிதம்பரம், தர்மராஜன் ஆகியோர் பேசினர். திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் குணா, மாநகர் மாவட்ட தலைவர் செந்தில், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சண்முகம், கும்பகோணம் மாநகரத் தலைவர் சங்கர், தஞ்சை மாநகரத் தலைவர் ராஜவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: