×

348 பேருக்கு சான்றிதழ் வழங்கல் தடையை மீறி பேரணி: 41 பேர் கைது

அரியலூர், ஜன.27: டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டமைப்பு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று தேசிய கொடியுடன் டிராக்டர் பேரணி நேற்று காலை நடைபெற்றது. விவசாயிகள், டிராக்டரின் முன்பு நின்று தேசிய கொடியை கையில் ஏந்தியபடி, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன் தலைமையில் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது தூரம் விவசாயிகள் பேரணி செல்ல அனுமதித்தனர். விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும், விவசாயிகளுக்கும், விவசாய போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க கோரியும், மத்திய அரசுக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இதனால் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பும், நெருக்கடியும் ஏற்பட்டது. உடன் போலிசார் பேரணியாக சென்ற போராட்ட விவசாயிகளை, போலிஸ் வாகனங்களை சாலையில் குறுக்கே நிறுத்தி 41 பேரை கைது செய்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ