×

மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டு விழா நாளை நடக்கிறது

குளச்சல், ஜன.27: மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடை பந்தல் கால் நாட்டுவிழா நாளை நடக்கிறது.  குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் மாசிக்கொடை விழா வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 9ம் தேதி வரை 10  நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு உஷபூஜை, காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நிறை புத்தரிசி பூஜை, தொடர்ந்து பந்தல்கால் நாட்டுவிழா நடக்கிறது. இதை தொடர்ந்து இந்து சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரளா மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Masikkodai Bandal Kal Nadu ,Mandaikadu temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...