×

போலீசாரை கண்டித்து விவசாயிகள் மறியல்

தரங்கம்பாடி, ஜன. 27: மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தேசிய கொடியுடன் டிராக்டர் பேரணி நடந்தது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக தரங்கம்பாடி பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகளின்டிராக்டர்களை செம்பனார்கோவில் விளநகர் பகுதியில் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். இதனால் சிபிஎம் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கணேசன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ரவீந்திரன், சிறு விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்ட பலர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED கண்மாய் நீர்வரத்து ஓடையானது...