×

சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் குடியரசு தினவிழா

நாகை, ஜன. 27: நாகை மாவட்டம் பாப்பாக்கோவிலில் இயங்கி வரும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருவாரூர் லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் துரைவேலன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி கல்வி நிறுவனங்களின் செயலாளர் மகேஸ்வரன் பேசினார். சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகதாஸ் வரவேற்றார். விழாவில் அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.

Tags : Isaac Newton Institute of Education ,Republic Day ,
× RELATED குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட்...