×

சீர்காழி காவல் நிலையம் முன் உண்ணாவிரதம் தர் வாண்டையார் உட்பட 80 பேர் கைது

சீர்காழி, ஜன. 27: கள்ளர், மறவர், அகமுடையார் உள்பிரிவுகள் கொண்ட முக்குலத்தோரை தேவர் இன பட்டியலில் சேர்த்து தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சீர்காழி, நாகை போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையம் முன் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் தர் வாண்டையார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த தகவல் கிடைத்ததும் சீர்காழி டிஎஸ்பி யுவப்பிரியா, தாசில்தார் ஹரிதரன் மற்றும் போலீசார் வந்து தர் வாண்டையார் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோரை சீர்காழி போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மண்டபத்திலிருந்து விடுவித்தும் தர் வாண்டையார் அங் கேயே தொடர்ந்து உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக தர் வாண் டையார் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை கைது செய்தாலும் உண்ணாவிரதம் சிறையில் சென்றும் தொடரும். திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் அமைதியான சூழலில் உள்ள இப்பகுதியில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க  முயற்சி செய்கிறார் என்றார்.


Tags : hunger strike ,Auder Vandayar ,police station ,Sirkazhi ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்