×

நாகையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் 95 பேருக்கு ரூ.84 லட்சம் நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

நாகை, ஜன. 27: நாகையில் நடந்த குடியரசு தினவிழாவில் 95 பேருக்கு ரூ.84 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரவீன்பிநாயர் வழங்கினார். நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று 72வது குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் பிரவீன்பிநாயர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைதொடர்ந்து போலீசார், ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரணியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இதைதொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை சார்பில் 4 பேருக்கு தங்கப்பதக்க விருது, வருவாய்த்துறையில் 27 பேர், ஊரக வளர்ச்சி மறறும் உள்ளாட்சி துறையில் 10 பேர், சுய உதவி குழுக்களை ஊக்குவித்ததற்காக 3 வங்கி, மாவட்ட சமூக நலத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த ஒருவர், தீயணைப்புத்துறையில் 10 பேர், வேளாண்மை துறையில் 9 பேர், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறையில் 5 பேர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் 9 பேர், கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் 5 பேர், வனத்துறையில் 10 பேர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2 பேர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 2 பேர், சுகாதாரத்துறையில் 6 பேர், நெடுஞ்சாலைத்துறையில் 5 பேர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் ஒருவர், மீன்வளத்துறையில் 6 பேர், பொதுப்பணித்துறையில் 5 பேர், மின்சார துறையில் 5 பேர், கால்நடை பராமரிப்பு துறையில் 3 பேர், கூட்டுறவுத்துறையில் 4 பேர், பள்ளி கல்வித்துறையில் ஒருவர், 108 அவசர ஊர்தி பணியாளர்களில் 11 பேர், 102 தாய்சேய் நல ஊர்தி பணியாளர்கள் 4 பேர், இலவச அமரர் ஊர்தி பணியாளர்கள் 6 பேர் என 95 பயனாளிகளுக்கு ரூ.84,44,509 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் எம்பி செல்வராசு, எம்எல்ஏ மதிவாணன், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, டிஆர்ஓ இந்துமதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.


Tags : Collector ,Republic Day ,Naga ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...