×

மயிலாடுதுறையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை, ஜன. 27: மயிலாடுதுறையில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் லலிதா ஏற்று கொண்டார். மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் லலிதா ஏற்று கொண்டார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை கலெக்டர் லலிதா வழங்கினார். விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் செயற்பொறியாளர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார், அரசு மருத்துவமனையில் டாக்டர் ராஜசேகர், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிங்காரவேலன், டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோர் கொடியேற்றினர்.

Tags : Republic Day Celebration ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடும்பாறை கிராமத்தில் ஆட்டு சந்தைக்கு இடம் தேர்வு