×

காரைக்காலில் குடியரசு தினவிழா

காரைக்கால், ஜன. 27: காரைக்கால் கடற்கரை சாலையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் அர்ஜுன் ஷர்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
விழாவில் எம்எல்ஏ அசனா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிகாரிகாபட் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். காவல்துறையின் ஊர்க்காவல் படை பிரிவு அணியினர் அணிவகுப்பில் முதலிடத்தை பெற்றனர். இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு, கேடயங்களை கலெக்டர் அர்ஜுன் சர்மா, எம்எல்ஏ அசனா ஆகியோர் வழங்கினர். முன்னதாக காரைக்கால் மாவட்ட விடுதலை போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் அர்ஜுன் ஷர்மா சால்வை அணிவித்து கவுரவித்தார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

Tags : Republic Day ,Karaikal ,
× RELATED குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட்...