×

இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

கரூர், ஜன. 27: கரூர் திருக்காம்புலியூர் அருகே இரண்டு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி நடத்தும் வகையில் ஏராளமானோர் நேற்று ஒன்று கூடினர். சம்பவ இடத்துக்கு வந்த டவுன் போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால், இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக்குழுவினர் கரூர் ஈரோடு சாலை வடிவேல் நகர் அருகே திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர், ஒரு மணி நேரத்துக்கு பிறகு, அனைவரும் அந்த பகுதியில் இருந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக நடந்து சென்றனர்.

குளித்தலை: 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று 72வது குடியரசு தினத்தில் அனைத்துக் கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி என அறிவித்திருந்தனர் தகவலறிந்த குளித்தலை போலீசார் பேரணி துவங்கும் இடமான பெரியார் நகரில் அனைத்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கிடையாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனிடையே சமரசம் ஏற்பட்டு சிறிது தூரம் ஊர்வலம் சென்று எங்களுடைய நியாயமான விவசாய கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷமிட  அனுமதி பெற்று  சிறிது நேரம் பெரிய பாலத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு ராஜூ தலைமை வகித்தார். இதில் மதிமுக நகர செயலாளர் சிவேஸ் வர்ஷன், காங்கிரஸ் முன்னாள்   மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : unions ,rally ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...