குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடையில் மது விற்பனை ஜோர்

தோகைமலை, ஜன. 27: நேற்று குடியரசு தினத்தை ஒட்டி மதுபானக்கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்து இருந்தது. இதனை அடுத்து கரூர் மாவட்ட நிர்வாகமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளுக்கும் விடுமுறை அளித்து இருந்தது..ஆனால் நேற்று நங்கவரம் காவல்காரன்பட்டி மெயின் ரோட்டில் உள்ளநெய்தலூர் காலனியில் உள்ள அரசு மதுபானக்கடை வளாகத்தில் அரசு உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றதாக குடிமகன்கள் வேதனையு–்டன் தெரிவித்தனர்.மேலும் அரசு விடுமுறை தினத்தை பயன்படுத்தி, அரசு அனுமதி வழங்கிய பிராண்ட்டுக்கு பதிலாக அரசு அங்கீகாரம் இல்லாத போலிமதுபானங்களும் விற்பனை செய்ததாகவும் கூறுகின்றனர்.. இதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர;வாகத்தின் உத்தரவை மதிக்காமல், நெய்தலூர; காலனியில் செயல்படும் அரசு மதுபானக்கடை மற்றும் மதுபான பார; வளாகத்தில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது மேலும் போலிமதுபானங்களையும், அரசு மதுபானங்களையும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குடிமகன்கள் வேதனை தெரிவித்தனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூகஆர்வலர்களும், குடிமகன்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: