டூவீலர் மீது லோடு ஆட்டோ மோதல்

கடவூர்,ஜன.27: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள குளக்காரன்பட்டி யை சேர்ந்த துரைக்கண்ணு மகன் காளியப்பன் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் குளக்காரன்பட்டி யிலிருந்து தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பசுபதிபாளையம் என்ற இடத்தில் லோடு ஆட்டோ டூவீலரில் மோதியது. இதில் காளியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்து மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார் இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>