×

குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

தேனி, ஜன. 27: நாடு முழுவதும் நேற்று 72ம் ஆண்டு குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து காவல், தீயணைப்பு, ஊர்க்காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் முதல்வர் பதக்கம் 69 காவலர்களுக்கும், சிறப்பாக பணியாற்றிய 7 காவலர்களுக்கும், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், டாக்டர் கண்ணன், கிருஷ்ணம்மாள் மருத்துவமனையின் நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் 20 ஆண்டுகள் சிறப்பாக விபத்தின்றி வாகனம் ஓட்டிய அரசு ஜீப் ஓட்டுனர்கள் 3 பேர் உள்பட 82 பேருக்கு 4 கிராம் தங்கத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேனி தேனி எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மகிளா நீதிபதி வெங்கடேசன், நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் நாகராஜன், யூனியனில் சேர்மனும், வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளருமான சக்கரவர்த்தி. மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் சேர்மன் ப்ரீத்தா. கம்மவார் சங்க மெட்ரிகுலேசன் பள்ளியில் தலைவர் நம்பெருமாள், நாடாஸ் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் செயலாளர் காளிராஜ், பொறியியல் கல்லூரியில் இணை செயலாளர் ராஜ்குமார், துவக்க பள்ளியில் நிர்வாக குழு உறுப்பினர் வன்னியராஜன், அல்லிநகரம் அரசு பள்ளியில் கிராம கமிட்டி பொருளாளர் தரன், ஆர்எஸ் மெட்ரிக் பள்ளியில் நிறுவன தலைவர் சங்கரநாராயணன் தேசிய கொடியேற்றினர்.

ஆண்டிபட்டி: தேனி ஜிஹெச்சில் டீன் இளங்கோவன், ஆண்டிபட்டி ஜிஹெச்சில் தலைமை மருத்துவர் அன்புச்செழியன், நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பேரூராட்சியில் கண்காணிப்பாளர் சுப்பிரமணி, துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி தங்ககிருஷ்ணன், போலீஸ் நிலையத்தில் சரவணதேவேந்திரன், எஸ்ஐ கோதண்டராமன், வைகை அணை ஸ்டேஷனில் எஸ்ஐ மனோகரன், ராஜதானி ஸ்டேஷனில் எஸ்ஐ சாகுல்அமீது, க.விலக் ஸ்டேஷனில் எஸ்ஐ திருக்குமரன் தேசிய கொடியேற்றினர். கடமலை- மயிலை: கடமலை- மயிலை யூனியனில் சேர்மன் சந்திரா, வருசநாடு வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் ஆறுமுகம், மேகமலை அலுவலகத்தில் வனச்சரகர் சதீஷ்கண்ணன், மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் பழனி, கடமலைக்குண்டு போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்ஐ முத்துராமலிங்கம், வருசநாடு ஸ்டேஷனில் எஸ்ஐ ராமசாமி, மயிலாடும்பாறை ஸ்டேஷனில் எஸ்ஐ சதீஷ் மகாராஜன், மயிலாடும்பாறை அரசு பள்ளியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரன், வருசநாடு மீரா பள்ளியில் தாளாளர் செல்வம் கொடியேற்றினர்.

போடி: போடி நகராட்சியில் ஆணையாளர் ஷகிலா, தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மணிமாறன், நீதிமன்றத்தில் நீதிபதி உம்மல் பரிதா, சிஸ்சம் பள்ளியில் தாளாளர் வேதா, ஜமீன்தாரணி காமுலம்மாள் பள்ளியில் தலைவர் சீலராஜய்யா, சிவகாமி மணிமுத்து நினைவு இந்திரா பள்ளியில் தலைமையாசிரியர் சிவனேசன், காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் முசாக் மந்திரி, நகரவை பள்ளியில் தலைமையாசிரியர் பிரபு, காமராஜர் வித்யாலயா பள்ளியில் டிரஸ்ட் தலைவர் விஜயன் தேசிய கொடியேற்றினர். உத்தமபாளையம்: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் இந்திய கப்பல் படை அதிகாரி மாரிமுத்து, எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் மைதீன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமுமுக மாவட்ட துணை தலைவர் ஹபிபுல்லாஹ், வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் தலைவர் ஜலீலுர்ரகுமான், பிடிஆர் நினைவு இறகு பந்து மைதானத்தில் தலைமை மன்ற செயலாளர் நத்தா தேசிய கொடியேற்றினர்.
கம்பம்: கம்பம் உத்தமபுரம் அரசு கள்ளர் பள்ளியில் கல்விக்குழு தலைவர் ராஜாங்கம், நகராட்சியில் ஆணையாளர் சரவணக்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவர் ராஜாங்கம், நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் இம்தாதுல்லாஹ் பாகவி, நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சார்பில் வாவேர் பள்ளி ஜமாத் கமிட்டி தலைவர் பத்ரூத்தின், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வாவேர் பள்ளி ஜமாத் தலைவர் முகமது பதுருதீன் தேசிய கொடியேற்றினர். கம்பம் வடக்கு காவல்துறை சார்பில் முதிய பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

சின்னமனூர்: சின்னமனூர் நகராட்சியில் ஆணையாளர் சியாமளா, யூனியனில் சேர்மன் நிவேதா, கிருஷ்ண ஐயர் பள்ளியில் தாளாளர் மாரிமுத்து, நல்லி மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாளாளர் ராமர், கணக்கு வேலாயி அமராவதி அம்மாள் பள்ளியில் தலைமையாசிரியை காமேஸ்வரி, கன்னிசேர்வைபட்டி காந்திஜி வித்யாபீடம் பள்ளியில் தலைவர் கணேசன் தேசிய கொடியேற்றினர். பெரியகுளம்: பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப்கலெக்டர் சினேகா, வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரத்னமாலா, மாவட்ட கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி முத்துக்குமார், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளர் சரவணக்குமார், நகராட்சி அலுவலகத்தில் ஆணையார் அசோக்குமார், யூனியனில் பிடிஓ ஜெகதீசன், வடுகபட்டி பேரூராட்சியில் செயல்அலுவலர் கணேசன், தாமரைக்குளம் பேரூராட்சியில் செயல்அலுவலர் கவுஸ்முகைதீன், எண்டப்புளி ஊராட்சியில் தலைவர் சின்னப்பாண்டியன், கீழவடகரை ஊராட்சியில் தலைவர் செல்வராணி, லெட்சுமிபுரம் ஊராட்சியில் தலைவர் ஜெயமணி, சருத்திபட்டி ஊராட்சியில் தலைவர் சாந்தி, தங்கம் முத்து பாலிடெக்னிக்கில் முதல்வர் மீனாட்சிநாதன், முன்னாள் முப்பை வீரர்கள் நலச்சங்கத்தில் கர்னல் ரவிச்சந்திரன், பெரியகுளம் அரசு ஆண்கள் பள்ளியில் தலைமையாசிரியர் கோபிநாத், பெண்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ராஜலட்சுமி, வடுகபட்டி அரசு பள்ளியில் டாக்டர் செல்வராஜ், புத்தூர் பள்ளியில் தலைமையாசிரியர் வேணுகோபால், எ.புதுக்கோட்டை பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பாண்டியன், பிரசிடென்சி பள்ளியில் செயலாளர் ராஜ்குமார், சேக்கிழார் பள்ளியில் தலைமையாசிரியர் விஜயக்குமார், லெட்சுமிபுரம் ரேணுகா பள்ளியி–்ல துணை முதல்வர் மருதமாலதி தேசிய கொடியேற்றினர்.

Tags : Republic Day Celebration ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு