×

தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினவிழா

திருச்செந்தூர், ஜன. 27: குடியரசு தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் எம்எல்ஏ அலுவலகம் முன்பு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தேசிய கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் செங்குழிரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மீனவரணி தர்ரொட்ரிகோ, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பரமன்குறிச்சி இளங்கோ, விவசாய தொழிலாளரணி பொன்முருகேசன், வழக்கறிஞரணி ஜெபராஜ், சாத்ராக், கலைச்செல்வன், சிறுபான்மை அணி சாமுவேல்ராஜ், மாணவரணி அமைப்பாளர் தங்கபாண்டியன், பிரேவின், கேடிசி முருகன், நகர துணைச்செயலாளர் தனசேகர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி:தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் கீதாஜீவன் எம்எல்ஏ தேசியக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணைச் செயலாளர் கனகராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ஜெயக்குமார், மாநகர தொண்டரணி அமைப்பாளர்
முருகஇசக்கி, மாணவரணி மாநகர துணை அமைப்பாளர் பால்மாரி, மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெபகனி, பகுதி துணைச்செயலாளர் பாலு, மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, வட்ட செயலாளர்கள் கண்ணன், சுரேஷ், சுந்தரவேல், சிங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தேசிய கொடியேற்றி பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றி பேசுகையில், விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதில், நிலைய மேலாளர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தலைவர் சுதாகர் தேசிய கொடியேற்றினார். இதில், பொதுமேலாளர் வெற்றிவேலன், உதவி பொதுமேலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி எஸ்.டி.ஆர். ரெஸ்ட்டாரென்ட் வளாகத்தில் அபி குழுமங்களின் சேர்மன் எஸ்.டி.ஆர்.பொன்சீலன் தேசிய கொடியேற்றினார். இதில், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வள மாலுமிகலை தொழில்நுட்ப கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் விசுவநாதன் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம், கடமைகள், உரிமைகள் பற்றியும், கல்லூரியின் விரிவாக்கம் மற்றும் மாணவர்களுக்கு கொடுக்கும் சிறப்பு பயிற்சிகளான ஆளுமைத்திறன், தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும்
மீனவர்களுக்கு தனிப்பயிற்சி ஆகியவற்றின் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார். விழாவில் மீன்வள மாலுமிக்கலை தொழில்நுட்பக் கல்லூரி, மீன்வள தொழில் காப்பகம், தொழிற்பயிற்சி மையம் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துராஜா பீரிஸ் செய்திருந்தார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. துறைக பொறுப்புக் கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்து, தேசியக்கொடியினார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். துறைமுக ஊழியர்கள், அதிகாரிகளின் சிறப்பான பணி, தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு, துறைமுக உபயோகிப்பாளர்களின் சீரிய செயல்பாட்டிற்கு நன்றி தெரிவித்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், சுங்கதுறை முகவர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், துறைமுக அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் தாளாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லபாண்டியன் தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர், உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், சாரண சாரணியர் இயக்க பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரி, ராஜலெட்சுமி கலைக்கல்லூரிகளில் நடந்த விழாவில் சேர்மன் ஆறுமுகநயினார் தேசிய கொடியேற்றினார். அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயலெட்சுமி, கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார், தாளாளர் ராஜலெட்சுமி ஆறுமுகநயினார், கல்லூரி முதல்வர்கள் ஜான்சன் வீராசிங், ராஜதுரை, கல்லூரியின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சுமதி ஆறுமுகம் கிருஷ்ணகுமார், சுகன்யா சம்பத், ஜெயலலிதா கருப்பசாமி மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தலைமை வகித்து தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.இதில், வங்கியின் துணைத்தலைவர் சிதம்பரநாதன், பொதுமேலாளர்கள் இன்பமணி, ஆறுமுகபாண்டி, துணை பொதுமேலாளர்கள் அசோக்குமார், வாசுகி, முதன்மை மேலாளர் தினேஷ், மண்டல மேலாளர் சுந்தரேஸ்குமார் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் துணைசேர்மன் ரெஜிபர்ட் பர்னாந்து, ஒன்றிய கவுன்சிலர் வாசுகி, தொழிலதிபர் சுதர்சன், வடமலை பாண்டியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்றோ, பாலமுருகன், மீனாம்பாள், அலுவலக டைப்பிஸ்ட் ஆனந்தன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
குளத்தூர்:  குளத்தூர் த.மாரியப்பன் நாடார் முத்துக்கனியம்மாள் கலைக்கல்லூரியில் நடந்த  குடியரசு தினவிழாவுக்கு  கல்லூரி தலைவர் தாமஸ் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் கோபால் தேசிய கொடியேற்றினார். பேராசிரியை ஞானசவுந்தரி வரவேற்றார். முதல்வர் அன்பழகன் குடியரசு தினம்குறித்து பேசினார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கினர். கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஆண்டனிமதன் நன்றி கூறினார்.

நாசரேத்:நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் நடந்த குடியரசு தினவிழாவில் முன்னாள் எம்பி ஏ.டி.கே.ஜெயசீலன் தேசிய கொடியேற்றினார். கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், துணைமுதல்வர் ஜரின் நிஷானி, ஆசிரியை ஜெசுடியாள் செல்வின் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.   மர்காஷிஸ் கல்லூரியில் துணை முதல்வர் பெரியநாயகம் ஜெயராஜ் தலைமையில் புனித லூக்கா சமுதாய கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் தேசிய கொடியேற்றினார். பேராசிரியர் அந்தோணி செல்வகுமார், செயலர் எஸ்.டி.கே.ராஜன், முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் லயன் புஷ்பராஜ் தேசிய கொடியேற்றினார். முதல்வர் ஆக்னஸ் மேபல் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் பங்கேற்றனர். நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தேசிய கொடியேற்றினார். எஸ்ஐ தங்கேஸ்வரன் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.

நாசரேத் பேரூராட்சியில் செயல் அலுவலர் முருகன் தேசிய கொடியேற்றினார். இதில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.மூக்குப்பீறி ஊராட்சியில் தலைவர் கமலா கலைஅரசு தேசிய கொடியேற்றினார். துணை முதல்வர் தனசிங் இனிப்பு வழங்கினார். செயலாளர் வேதமாணிக்கம், கவுன்சிலர்கள் ரிட்டா, பிச்சைக்கனி, கிரேஸ், பாலசுந்தர், அந்தோணி கிறிஸ்டி, பாக்கியசீலி, கலைஅரசு மற்றும் மகளிர் குழுவினர், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர். நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் விஏஓ முத்துராமன் தேசிய கொடியேற்றினார். தாளாளர் ஜெபச்சந்திரன், முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பேராசிரியர் ஜான் வெஸ்லி, விரிவுரையாளர் வெலிங்டன், கல்லூரி பர்சார் முத்துசந்திரசேகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

உடன்குடி:மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் பஞ்சாயத்து தலைவர் கிருபா தேசிய கொடியேற்றினார். பள்ளி தாளாளர் பெஞ்சமின் லிண்டால், மெஞ்ஞானபுரம் வியாபாரிகள் சங்கதலைவர் ராஜபிரபு, ஊர் பொதுமகமை சங்க பொருளாளர் சொர்ணராஜ், தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன், ஆசிரியர் ஜாண்சன் ஆபிரகாம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். செட்டியாபத்து பஞ்சாயத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள் கணேசன், மஞ்சுளா, உஷா, சக்திகனி, சங்கர், ரகு முன்னிலையில் யூனியன் கவுன்சிலர் மகாராஜா தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

கழுகுமலை: கழுகுமலை அரசு பள்ளியில் நடந்த விழாவில் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் சிவராமன், துணைத்தலைவர் முருகன் தேசிய கொடியேற்றினர். தலைமை ஆசிரியர் சீத்தா மகேஸ்வரி, பொன்ராஜ் பாண்டியன், 10,11,12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரோஸ் மேட்சஸ் மேலாளர் இசக்கிமுத்து, சென்னை எஸ்விசி டிரஸ்ட், நிஜாம் மேட்ச் ஒர்க்ஸ் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. உதவி தலைமைஆசிரியர் ராஜகோபால் மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் பங்கேற்றனர். ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி வர்த்தக அணி சார்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கழுகுமலை பேரூராட்சி சுகாதார பணியாளர்களை கவுரவித்து மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயக்கொடி நினைவுப் பரிசு  வழங்கினார்.

மாவட்ட துணைச் செயலாளர் தீரவாசகம், தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர் விஜய்ஆனந்த், வழக்கறிஞரணி செயலாளர் செந்தில்ஆறுமுகம், வர்த்தக அணி இணைச் செயலாளர் சீனிவாசன், நகர இணைச் செயலாளர்கள் லட்சுமணராஜ், சந்திரசேகரன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் முருகன்,  செயற்குழு உறுப்பினர் செந்தில், வார்டு செயலாளர் செய்யதலி,   கழுகுமலை நகர செயலாளர் சீனிவாசன், இணைச் செயலாளர் பூக்கடை செந்தில் பங்கேற்றனர்.
ஸ்பிக்நகர்: ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஸ்பிக் நிறுவனத்தின் முதன்மைசெயல் அலுவலர் பாலு  தேசியக் கொடியை ஏற்றினார்.  பள்ளி செயலர் பிரேம்சுந்தர், தலைமையாசிரியர் பாபு ராதா
கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். சாத்தான்குளம்:சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் வக்கீல்கள் கல்யாண்குமார், வேணுகோபால், தியோனிஸ்சசிமாரிசன், ராஜன் சுபாஷிஸ், சிவபாலன், சஷ்டிகுமரன், வட்ட சட்ட பணிகள் குழு மகேந்திரன், ரவி பாண்டியன், சங்கர், ராவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Republic Day ,Thoothukudi district ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...