×

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் திமுக சார்பில்

திருவண்ணாமலை, ஜன.27: திருவண்ணாமலையில் திமுக மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே, திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காலேஜ் கு.ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மதிவாணன் வரவேற்றார். கூட்டத்தில், திமுக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் கு.வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினர். அப்ேபாது, மொழிப் போராட்டத்தில் திமுகவின் பங்களிப்பு, மொழி காக்க உயிர் நீத்த தியாகிகளின் தியாகம் குறித்து விளக்கினர். இதில், முன்னாள் எம்பி த.வேணுகோபால், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, பா.ஷெரீப், ஒன்றிய செயலாளர் ரமணன், இளைஞர் அணி விஜயராஜ், கலைமணி, முன்னாள் கவுன்சிலர் குட்டி புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி: வந்தவாசி தொகுதி திமுக சார்பில் மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் கோட்டை மூலை பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நகராட்சி முன்னாள் தலைவர் எல்.அப்சர்லியாகத், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.நந்தகோபால், டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.பிரபு, கே.டி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருப்பாளர் எச்.ஜலால் வரவேற்றார். இதில் தலைமை பேச்சாளர்கள் தஞ்சை கூத்தரசன், என்.சந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Tags : Weerawansa Day ,meeting ,war martyrs ,Thiruvannamalai ,DMK ,
× RELATED அதிமுக சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்