×

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, ஜன.27: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினர். திருவண்ணாமலையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் முஸ்தாக்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் இப்ராகிம் பாஷா, முகமது, அப்துல் சுபகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, அண்ணா சிலையில் தொடங்கி, அண்ணா நுழைவு வாயில் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.

Tags : Demonstration ,Thiruvannamalai ,
× RELATED ஆர்ப்பாட்டம்