×

அவிநாசியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

அவிநாசி, ஜன.27: அவிநாசி ஒன்றிய தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அவிநாசி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சிவப்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் விவேக் வரவேற்றார். கூட்டத்தில் தலைமைக்கழக பேசாளர்கள் தாரை சிவா மற்றும் முன்னாள் எம்.பி. தங்கவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், மொழிப்போர் தியாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, நகர செயலாளர்கள் அவிநாசி பொன்னுசாமி, பூண்டிபாரதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்னூர் ஆனந்தன், சேவூர் பால்ராஜ், பூண்டிபழனிசாமி, இலக்கிய அணி மாவட்ட தலைவர் ராயப்பா, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செல்வரங்கம், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைஅமைப்பாளர் பத்மநாதன், அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியாயிபாளையம் சேதுமாதவன், ஒன்றிய இளைஞரணி விக்னேஷ், நகர இளைஞரணி வசந்தகுமார், நகர துணை செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Heroic Worship Day Public Meeting ,Avinashi ,
× RELATED அவிநாசியில் வெறி நாய் கடித்து 40 பேர் காயம்