காங்கயத்தில் குடியரசு தினத்தன்று மது விற்பனை ஜோர்

காங்கயம், ஜன.27:குடியரசு தினமான நேற்று காங்கயத்தில் மது விற்பனை அமோகமாக நடந்தது. இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுதந்திரதினம், காந்தி ஜெயந்தி, வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம், உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் மக்கள் குடிக்காமல் இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே விடுமுறை விடப்படுகிறது. டாஸ்மாக் கடை விடுமுறை நாளில் கூடுதல் விைல கொடுத்து மது வாங்கி குடித்து வருகின்றனர். காங்கயத்தில் பல பகுதிகளில் விடுமுறை நாளில் விற்பனை கொடிகட்டி பறப்பதை பார்க்க முடிகிறது. கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்த நிலையில், சரக்கு விற்பனை மறைமுகமாக நடந்தது.

150 ரூபாய் குவாட்டர் ரூ.250க்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு, வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக சரக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில், மதுக்கடை வளாகத்துக்குள்ளேயே, குடிமகன்கள் மது அருந்தினர். போலீசார் மற்றும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கயத்தில் விதிமுறை மீறி மது விற்பனை நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இருந்தும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாதது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட எஸ்பி. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: