×

குடியிருப்பு பகுதிகளில் குடியரசு தின விழா

பொள்ளாச்சி, ஜன. 27: பொள்ளாச்சி பொதுமக்களின் அழைப்பை ஏற்று திமுக. மாநில விவசாய அணி துணை தலைவர் இரா.தமிழ்மணி, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட  சேரன்நகர், தமிழ்மணி நகர்,லட்சுமி நகர், ஜிஐடி காலனி, முருகன் லே-அவுட் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். விழாவில் சேரன்நகர் சுரேஷ், கார்த்திகேயன், சரவணபிரகாஷ், ஹரிஷ், சரசுவதி, ஷாஜி, 7வது வார்டு கவுன்சிலர் மங்கலதீபா, சுரேஷ்குமார், 8வது வார்டு கவுன்சிலர் தேவேந்திரன் மற்றும் 500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : celebration ,Republic Day ,areas ,
× RELATED குடியரசு தினத்திற்கு முன்பாக...