×

கண்கள் தானம்

கோவை, ஜன. 27: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தந்தையின் கண்கள் தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி அருகேயுள்ள கோதவாடி கிராமத்தை சேர்ந்தவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. தற்போது தமிழ்நாடு அறிவியல் மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது தந்தை மயில்சாமி (86) பீளமேட்டில் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் திங்கட்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது கண்கள் தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் ஒன்றிய கண்மாய்களில் மீன்...