கோவை செயின்ட் பால்ஸ் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி முகாம்

கோவை, ஜன. 27: கோவை தடாகம் சாலையில் உள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் கல்லூரியில் தேசிய நகர்ப்புற திறன் பயிற்சித் திட்டம் நடத்தும் “மொபைல் போன் ஹார்டுவேர் ரிப்பேர் மற்றும் டெக்னீசியன்” என்ற இலவச தொழிற்பயிற்சி முகாம் மகளிருக்கு வழங்கப்பட்ட உள்ளது. இது குறித்து கல்லூரியின் சேர்மன் டேவிட் கூறுகையில், ‘‘பிப்ரவரி 8ம் தேதி இந்த தொழில் பயிற்சி முகாம்  நடைபெற உள்ளது. இதற்கான கல்வித் தகுதி எதுவும் இல்லை.  18 வயது முதல் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். செல்போன் துறையில் நல்ல அனுபவமும் தகுதியும் உள்ளவர்கள் பயிற்சி கொடுக்கவிருக்கின்றனர். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சிக்கான கட்டணம், உபகரணங்கள், சீருடை இலவசமாக வழங்கப்படும்.

இந்த இலவச பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்கள், வீட்டில் இருந்தபடியே மாதம் 15 ஆயிரத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம். இதுமட்டுமின்றி 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மத்திய அரசு சான்றிதழ் வளங்கப்படுவதால் தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதிகள் கிடைக்கும். இப்பயிற்சி வகுப்புகள் வகுப்பு  90 நாட்கள் வரை நடக்கும். இந்த இலவச பயிற்சி முகாமில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆதார் கார்டு,  ரேஷன் கார்டு,பேங்க் பாஸ்புக்,  பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோகள் கொண்டு வரவேண்டும்’ என கூறினார். மேலும் தகவல்களுக்கு 0422-2404615, 9087782726 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: